ADDED : ஜூலை 07, 2024 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சிலம்பிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாண்டிகுழி கிராமத்தில் கபடி போட்டி நடந்தது.
பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் சேகர் வரவேற்றார். கபடி போட்டியை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், தச்சக்காடு ஊராட்சி தலைவர் ராம் மகேஷ், பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.