/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கச்சித்தீவு தாரைவார்ப்பு பிரச்னை மோடிக்கு செம்மலை கேள்வி
/
கச்சித்தீவு தாரைவார்ப்பு பிரச்னை மோடிக்கு செம்மலை கேள்வி
கச்சித்தீவு தாரைவார்ப்பு பிரச்னை மோடிக்கு செம்மலை கேள்வி
கச்சித்தீவு தாரைவார்ப்பு பிரச்னை மோடிக்கு செம்மலை கேள்வி
ADDED : ஏப் 04, 2024 12:49 AM

சிதம்பரம்: கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் காங்., ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட் மனுவை மோடி தலைமையிலான பா.ஜ., அரசு திரும்ப பெறுமா என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் லோக்சபா அ.தி.மு.க., தேர்தல் பணி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான, செம்மலை அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. லோக்சபாவில் விவாதிக்காமல், தீர்மானம் கொண்டு வராமல் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
மேலும், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய கோரி, 2008ல், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு, இன்றும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு, மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்., ஆட்சியில், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும் வகையில், இப்பிரச்னையில் லோக்சபாவில் தீர்மானம் கொண்டு வரத்தேவையில்லை என கூறி, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.
காங்., ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட் விவரம், பா.ஜ., வினருக்கு தெரியுமா என, தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ., வினர், இப்பிச்னை குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி அக்கரையாக பேசி வருகிறார். எனவே, கச்சத்தீவு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடுத்த வழக்கில், அப்போதைய மத்திய காங்., தாக்கல் செய்த அபிடவிட் மனுவை மத்திய பா.ஜ., அரசு திரும்ப மோடி முன்வருவரா.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக, புதிய மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால், பிரதமர் மோடி கச்சித்தீவு பிரச்னையில் அக்கரையுடன் பேசுவதில் நியாயம் இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

