/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வில்வித்தையில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
/
வில்வித்தையில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
வில்வித்தையில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
வில்வித்தையில் பதக்கங்களை குவிக்கும் கடலுார் மாணவி
ADDED : ஆக 22, 2024 12:54 AM

கடலுார்: கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பவர் லக் ஷயா, 13; ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளில் வில்வித்தையில் வீராங்கனைகள் சாதிப்பதை பார்த்து, இவருக்கும் சிறு வயது முதலே வில்வித்தை பயிற்சி பெற வேண்டும் என, ஆர்வம் ஏற்பட்டது.
அதன்படியே, கடலுார் டைகர் இண்டர்நேஷ்னல் வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒராண்டுக்கு மேலாக பயிற்சி பெற்று வருகிறார். இவரது ஆர்வத்தை புரிந்துகொண்ட பயிற்சியாளர் சுரேஷ்குமார், அவரை போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தயார்படுத்தினார்.
அதன்படி, கடந்த ஏப்., 28ல் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் முதன்முறையாக பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதை தொடர்ந்து, மே., மாதம் வேலுாரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்க வென்றார். அடுத்து, ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 18ம் தேதி மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் இரண்டாவது முறையாக தங்க பதக்கமும் வென்று, பதக்கங்களை குவித்து வருகிறார்.
வில்வித்தை பயிற்சிக்கு முக்கிய தேவையான 'வில்வித்தை காம்பவுண்ட் போ' உபகரணம் சொந்தமாக வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லாத நிலையிலும், பயிற்சி மைய உதவியில் அவர் தொடர்ந்து, சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சி பெற்று வருகிறார்.
மதுரை போட்டியில் தங்கம் வென்ற லக் ஷயாவை, பள்ளி தலைமை ஆசிரியை லிட்டில் பிளார் மற்றும் பயிற்சி மைய பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.