/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
ADDED : ஜூன் 06, 2024 03:00 AM

கிள்ளை: சிதம்பரம் கொத்தங்குடி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், இரண்டாமாண்டு விழாவையொட்டி, கலச விளக்கு வேள்வி பூஜை, சமுதாயப்பணி, ஆன்மீக சொற்பொழிவு மற்றும் அன்னதானம் நடந்தது.
சக்தி்பீட தலைவர் கோபி தலைமை தாங்கி, கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். அருளானந்தம், பாலகுமார், அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார். மத்திய பிரசாரக்குழு சுப்ரமணியன், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியில் மண்டல துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், சீத்தாலட்சுமி, கணேசமூர்த்தி, தெற்கு மண்டல செயலாளர் கண்ணன், தெற்கு மண்டல தணிக்கையாளர் சஞ்சிவிராயர், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தன மணிவாசகம், கோவிந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வேள்விக்குழு மனோகரி, அஞ்சம்மாள், லதா, மஞ்சுளா, சுமதி, சாந்தி ராமலிங்கம், அரியகொடி முத்தையா, தேவி, பிரியா, சுவாதி, கார்த்திக் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.