/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கல்லா' கட்டும் அதிகாரி டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்
/
'கல்லா' கட்டும் அதிகாரி டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்
'கல்லா' கட்டும் அதிகாரி டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்
'கல்லா' கட்டும் அதிகாரி டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்
ADDED : செப் 04, 2024 11:20 AM
மாவட்டத்தில் 136 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 29 அனுமதிக்கப்பட்ட பார்கள் உள்ளன. டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு மூடப்படுகின்றன. மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் ஆட்டம் ஓவராக உள்ளதாம்.
ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் தொகையில் தனக்கு 'கல்லா' கட்ட வேண்டும் என்பதற்காக அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கள்ளத் தனமாக மதுபானங்களை விற்க வேண்டும் என, டாஸ்மாக் மற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இதற்கான சரக்குகளை முதல் நாள் இரவே எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டுமென, வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம். அதிகாரியின் பேச்சை மீற முடியாமல் ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கள்ளத் தனமாக மதுபானங்களை விற்பனை செய்கின்றனர்.
இதன் விளைவு மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் திருட்டு தனமாக விற்பனை செய்த பார் ஊழியர்கள் 3 பேர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
ஒரு பக்கம் அதிகாரியின் நெருக்கடி மறுபக்கம் வழக்குப் பதிவுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளதாக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.