/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காமராஜர் பிறந்தநாள் விழா: போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 04, 2024 10:12 PM
சிதம்பரம் : காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் காந்தி மன்றத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்,தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் கையெழுத்துப் போட்டியும், உயர்நிலை மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சியில் காமராஜர் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது.
மேலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குகாமராஜர் கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்கள்என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற உள்ளது.
இப்போட்டி, இம்மாதம் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு, சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்கள், குறித்து, அந்தந்த பள்ளி முதல்வர்கள், பங்கேற்க உள்ள மாணவர்களின்பெயர் பட்டியலை, 9443046295 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என காந்தி மன்றத் தலைவர் ஞானம் தெரிவித்துள்ளார்.