ADDED : ஜூலை 27, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கார்கில் போர் வெள்ளி விழா வெற்றி கொண்டாட்டம் மற்றும் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் டவுன்ஹால் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் தலைவர் பாபு தலைமை தாங்கினார். சங்கர் வரவேற்றார். வணிகர் சங்கத் தலைவர் முத்துக்குமரனார் மற்றும் வரி மற்றும் வாக்களிப்பு நல சங்க தலைவர் போஸ் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள், வரி மற்றும் வாக்களிப்போர் நலச் சங்க நிர்வாகிகள், வீரமரணமடைந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் சேகர், பன்னீர்செல்வம், பாலகுரு உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

