/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நினைவு நாள் அமைச்சர் வேண்டுகோள்
/
கருணாநிதி நினைவு நாள் அமைச்சர் வேண்டுகோள்
ADDED : ஆக 05, 2024 04:47 AM
கடலுார்: கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க., நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 7ம் தேதி காலை கடலுார் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்டம் மற்றும் கிளைகள் தோறும் நினைவு அஞ்சலி, அமைதி ஊர்வலம் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதிகளிலுள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, கிளை செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.