/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
/
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஆக 08, 2024 12:44 AM

நெய்வேலி : நெய்வேலி தொ.மு.ச., அலுவலகம் அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமையில் நகர தி.மு.க.,வினர் மற்றும் என்.எல்.சி., - தொ.மு.ச.,வினர் திரளாக பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, ஓன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ்குமார், ஒன்றிய தலைவர்கள் வீர ராமச்சந்திரன், ராஜா, பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், நெய்வேலி நகர தி.மு.க., தலைவர் நன்மாறபாண்டியன், பொருளாளர் மதியழகன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், நாசர், நகர துணை செயலாளர்கள் செந்தில், கருப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வடக்குத்து ஊராட்சி துணைத் தலைவர் சடையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் தொ.மு.ச., அலுவலக செயலாளர் ஜெரால்டு பங்கேற்றனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பஸ் நிலையம், பாலக்கரை, கடைவீதிஉள்ளிட்ட இடங்களில், தி.மு.க., வினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். எழுத்தாளர் இமயம், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், டாக்டர் முருகதாஸ் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராமு,நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர பொருளாளர் மணிகண்டன், மாவட்ட வழங்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடந்தது.
பண்ருட்டி
பண்ருட்டியில், தி.மு.க.,வினர் ஊர்வலமாக நான்கு முனை சந்திப்பிற்கு வந்து, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் சிவா, மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வம், தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். அவைத்தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர்கள் சீனுவாசன், கவுரிஅன்பழகன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணிசந்தர், இலக்கிய பகுத்தறிவு சங்கர், நகர இளைஞரணி சம்பத், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.