/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் ஆற்றில் கதவணை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
/
கொள்ளிடம் ஆற்றில் கதவணை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் கதவணை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் கதவணை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2024 12:47 AM

காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடத்தில் கதவணை கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சங்க தலைவர் விநாயகமூர்த்தி, தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:
கர்நாடாக அணைகளிலிருந்து தமிழகத்தில் உரிய நீரை காவிரி மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்டும், கர்நாடக அரசு மறுத்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணையும் நிரம்பியது. உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கீழணை வழியாக கடலுக்கு சுமார் 50 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.
ஆனால், டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவில்லை. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்வதை தடுக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை மாவட்டம் மாதிரவேளூர், கடலூர் மாவட்டம் கருப்பூர் இடையேயும், அரியலூர் மாவட்டம் வாழ்க்கை, தஞ்சை மாவட்டம் துத்தூர் இடையே கதவணை கட்டுவதற்கு ஆய்வு செய்தனர். தற்போது அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ம.புளியங்குடி, மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி இடையே கதவணை கட்டுவதன் மூலம் இரு மாவட்ட மக்களுடைய குடிநீர் தேவை பூர்த்தியடையும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்கும்.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், கொள்ளிடம் ஆற்றில் ம.புளியங்குடி -சித்தமல்லி இடையே கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.