ADDED : ஜூன் 28, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது.
கீரப்பாளையம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ரமேஷ் வரவேற்றார். துணைச் சேர்மன் காஷ்மீர் செல்விவிநாயகம், ஆணையாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளை கணக்காளர் பாலசுப்ரமணியம் வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய பகுதிகளில் இதுவரை மேற்கொண்ட பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள், செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.