/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவிகள் கடத்தல்; 2 பேர் 'போக்சோ'வில் கைது
/
பள்ளி மாணவிகள் கடத்தல்; 2 பேர் 'போக்சோ'வில் கைது
ADDED : ஆக 06, 2024 07:21 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பள்ளி மாணவிகளை கடத்திய 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த வலசை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சூர்யா (எ) சதீஷ், 24; வேன் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சதீஷ்குமார், 21; ஆத்துாரில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து வருகிறார். இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பள்ளியில் படித்துவரும் 16 வயதுடைய 2 பள்ளி மாணவிகளை நேற்று முன்தினம் கடத்திச் சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று மாணவிகளை மீட்டு, சூர்யா, சதீஷ்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.