/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 28, 2024 11:23 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இன்று (29ம் தேதி) துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர்களான விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,), இலங்கை தமிழர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இன்று காலை 9:30 மணியளவில் சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. அவர்கள், தங்களது முன்னுரிமைக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும்.
தொடர்ந்து, முதற்கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு தினசரி காலை 9:30 மணியளவில், ஜூன் 10 முதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நடக்கும்.
சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், அண்மையில் எடுத்த பாஸ்போட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வர வேண்டும்.