/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணி அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணி அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணி அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணி அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
ADDED : ஆக 08, 2024 12:34 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், கூட்டு குடி நீர் திட்டம் மற்றும் நகராட்சி பணிகள் குறித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகரமன்ற தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் குடிநீர் திட்டம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகளான, சிதம்பரம் புதிய பஸ் நிலையம், சிதம்பரம் ரிங்ரோடு, காய்கறி அங்காடி, குளம் தூர்வாரி புனரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அதன் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ் மற்றும்அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.