/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோண்டூரில் சாலை பணி எம்.எல்.ஏ., அடிக்கல்
/
கோண்டூரில் சாலை பணி எம்.எல்.ஏ., அடிக்கல்
ADDED : ஆக 28, 2024 04:29 AM

கடலுார் : கடலுார், கோண்டூரில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
கடலுார் ஊராட்சி ஒன்றியம், கோண்டூர் ஜோதி நகரில் அய்யப்பன்எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்குஅடிக்கல் நாட்டினார். துணை பி.டி.ஓ., வெங்கடேசன், செல்வி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், ஊராட்சி தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், ஊராட்சி செயலாளர் வேலவன், முன்னாள் ஊராட்சி தலைவர் மாயவன், முன்னாள் கவுன்சிலர் ஜோதி, நிர்வாகிகள் சங்கர், வெங்கடேசன், ரங்கநாதன், வில்சன், மோகன்தாஸ், சேகர், தண்டபாணி பங்கேற்றனர்.