ADDED : ஆக 25, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
மஞ்சக்குப்பத்தில் நடந்த விழாவில், சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். கிளை பொதுச் செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார்.
செயலாளர் நரசிம்மன் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிறப்பாக கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார். ஓவிய ஆசிரியர் மனோகரன் வாழ்த்திப் பேசினார்.
உறுப்பினர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

