/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 27, 2024 04:40 AM

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை திருமஞ்சனம் நடந்தது. பின், ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில். ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதையடுத்து, இன்று 27ம் தேதி காலை 8:00 மணிக்கு விசேஷ யாகவேள்வி, திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு உறியடி மற்றும் வீதியுலா நடக்கிறது. நாளை 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு கருடசேவை வீதியுலா மற்றும் 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 30ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.