/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்
/
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்
கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 10, 2024 09:44 PM

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லுாரியில் இந்த கல்வி ஆண்டில் புதியதாக இளநிலை தாவரவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் அடிப்படையில் மாணவியர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு சேர்க்கையின்போது, 590 மதிப்பெண் பெற்ற மாணவி ஹசீன் பர்ஹானா என்ற மாணவிகளுக்கு முழுக்கல்வி கட்டணச் சலுகையை கல்லுாரி சேர்மன் ராஜேந்திரன் வழங்கினார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதியும், கல்லுாரியில் மாணவியருக்கு தனி விடுதி வசதி உள்ளது என, கல்லுாரி முதல்வர் நிர்மலா கூறினார்.