நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி முகாமில் சிதம்பரம் பள்ளி மாணவி பங்கேற்றார்.
தேசியஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில்,பள்ளி மாணவர்களுக்கான 5 நாட்கள் பயிற்சி முகாம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட 150 பேரில், சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி மாணவி யாஷினியும், பங்கேற்றார்.மாணவியை பள்ளி நிறுவனர் விஸ்வநாதன், செயலர் சத்யபிரியா அரிகிருஷ்ணன், முதல்வர் லதா ஆகியோர் பாராட்டினர்.