ADDED : மே 28, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் அரசு உதவி பெறும் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மாணவி கனிமொழி 470 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவிகள் ஜெயா ஜான்சிராணி, யாழ்பிரபஞ்சனி 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவர் கிருஷ்ணகுமார், மாணவிகள் ஜெசிக்கா, சாருமதி 458 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவர் கிருஷ்ணகுமார், மாணவி ஜெயாஜான்சிராணி கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 46 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.