/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 10, 2024 01:20 AM

வேப்பூர்: என்.நாரையூர் ஸ்ரீராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வேப்பூர் அடுத்த என்.நாரையூரில் ஸ்ரீராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
மாணவர் முகமது வசிம் மன்சூர் 571 மதிப்பெண் முதலிடம், மாணவி சுவாதி 568 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், சிவரஞ்சனி 562 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்று, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
தமிழ் பாடத்தில் 3 பேர் 99 மதிப்பெண்கள், கணித பாடத்தில் 2 பேர் சென்டம் எடுத்தனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேர், 500க்கும் மேல் 22 பேர், 450க்கும் மேல் 45 பேர் மதிப்பெண்கள் சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரைப்பாண்டியன், வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, பள்ளி தாளாளர் கதிரவன், துணை தாளாளர் அவினாஷ், செயலாளர் அக்சயா, முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சம்பத்குமார், நிர்வாகிகள் சுஜாதா உடனிருந்தனர்.