/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி பி.டி.ஓ.,வை கிராம மக்கள் முற்றுகை
/
குமராட்சி பி.டி.ஓ.,வை கிராம மக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 31, 2024 04:01 AM

சிதம்பரம் : கொள்ளிடக்கரையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரி,பி.டி.ஓ., வை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அடுத்த கொள்ளிடக் கரையில், வல்லம் படுகையில் துவங்கி மாவட்ட எல்லையான கஞ்சன்கொல்லை வரை 60க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளது. இவர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட கொள்ளிடக்கரை சாலை சேதமடைந்தது. இந்த சாலை ரூ.28.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கீழப்பருத்திக்குடி - வல்லம்படுகை இடையே பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை துரிதப்படுததக்கோரி, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நேற்று காலை குமராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து, பணி நடக்கும் இடத்தை பார்வையிட வந்த பி.டி.ஓ., சரவணனை, முற்றுகையிட்டு சாலை பணியை விரைந்து முடிக்க கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.