
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கும்பாபிேஷகதத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.