ADDED : ஜூலை 13, 2024 12:39 AM
புவனகிரி: புவனகிரி அருகே ஆதிவராகநத்தம், பெருமத்துார் பூர்ண புஷ்கலா சமேத ஐயனார் மற்றும் செல்வ விநாயகர், வட்டமடையார் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 10ம் தேதி, காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று 12ம் தேதி காலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் யாகசாலையில் இருந்து காலை 8:30 மணியளவில் கடம் புறப்பாடானது.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஐயனார், செல்வ விநாயகர், வட்டமடையார், பாவாடைராயன், சின்னம்மாள் பரதேசி அப்பன், சப்த கன்னிகள், வீரனா, கருப்புசாமி, பெரியாண்டவர், சன்னியாசி, சங்கிலி வீரன், காட்டேரி அம்மன், பஞ்சபூதங்கள், நாகக்கன்னி சன்னதிகளில் உள்ள கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷகத்தை ஜெகதீச குருக்கள் நடத்தி வைத்தார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே.கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிரவன், குலதெய்வ வழிபாட்டினர் அபிராமிபட்டு உரிமையாளர் ராணி பன்னீர்செல்வம் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.