ADDED : செப் 10, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பூங்காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கோவிலில், கடந்த 6ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. முதற்கால யாக வேள்வி நடந்தது. 7ம் தேதி காலை 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, லலிதாஸஹஸ்ர நாமம், நவசக்தி அர்ச்சனை, தம்பதி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு யாத்ரா தானம் தீபாராதனையும், கடம் புறப்பாடாகி 11.00 மணிக்கு பூங்காளியம்மன் கோவில் விமான கலசத்திற்குபுனித நீர் ஊற்றி கும்பாபிேஷகமும், தொடர்ந்து மூலவர் கும்பாபிேஷகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.