ADDED : ஆக 24, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் செல்வவிநாயகர் கோவிலில் நேற்று 6ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு ேஹாமமங்கள் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு விநயாகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.