sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலி நடராஜர் கோவிலில் கும்பாபிஷேகம்

/

நெய்வேலி நடராஜர் கோவிலில் கும்பாபிஷேகம்

நெய்வேலி நடராஜர் கோவிலில் கும்பாபிஷேகம்

நெய்வேலி நடராஜர் கோவிலில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 16, 2024 10:45 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலி நடராஜர் கோயிவில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 16 ல் உள்ள சிவபுர வளாகத்தில் அமைந்துள்ள அறம்வளர்த்தநாயகி உடனமர் அழகிய திருச்சிற்றம்பலமுடையான், நாயன்மார்களுக்கான திருக்கோயில், சனீஸ்வர பகவான் மற்றும் அறம் வளர்த்தநாயகி உடனமர் செம்பொற்சோதிநாதர் திருக்கோவில் என தனி சன்னதிகளாக உள்ளது.

இக்கோவில்களில் கடந்த புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு நடந்த யாக சாலை பூஜையில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.,அதிகாரி பஞ்சாபகேசன் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் உள்ளிட்ட என்.எல்.சி., உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷகேத்தில் நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை நெய்வேலி பன்னரு திருமுறை வளர்ச்சிக்கழகம் மற்றும் நால்வர் நற்பணி மன்றம் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us