/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
சிலம்பியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 22, 2024 06:15 AM

புதுச்சத்திரம்: சிலம்பிமங்களம் சிலம்பியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 18 ம் தேதி காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரகஹோமம் நடந்தது. 19 ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், சாந்திஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை மாலை 6:00 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதற்காலையாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
இரவு 8.00 மணிக்கு விசேஷ சாந்தி, எஜமான சங்கல்பம், இரண்டாம் காலயாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 20ம் தேதி காலை 10:30 மணிக்கு யந்திரஸ்தாபனம்அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
மாலை 5.00 மணிக்கு தத்துவார்ச்சனை, சபர்சாஹுதி, மூன்றாம் காலையாக பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 21 ம் தேதி நேற்று காலை 6.00 மணிக்கு நான்காம் காலையாக பூஜை, யாத்ராதான சங்கல்பம், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 1.00 மணிக்கு கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

