/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுபாக்கம் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
சிறுபாக்கம் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 18, 2024 08:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம், : சிறுபாக்கத்தில் ஆண்டவர் கோவிலில் 42 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுபாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஆண்டவர் கோவிலில், செல்லியம்மன், கருப்பண்ணசாமி, மருதையன் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளது. இங்கு 42 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து கும்பாபிஷேக விழா நடந்தது.
வாண வேடிக்கைகளுடன் ஆண்டவர் மற்றும் செல்லியம்மன் கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.