/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவை சாகுபடி பணிகள் மின்வெட்டால் பாதிப்பு
/
குறுவை சாகுபடி பணிகள் மின்வெட்டால் பாதிப்பு
ADDED : மே 08, 2024 11:32 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சுற்று வட்டாரத்தில் தொடரும் மின்வெட்டால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு பகுதி கிராம பகுதிகளில், பெரும்பாலும் போர்வெல் பாசனம் செய்து குறுவை நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போர்வெல் மோட்டர் இயக்கக்கூடிய மின்சாரம் ஷிப்டு முறையிலும், அறிவிப்பு இல்லாமலும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, முகந்தரியங்குப்பம், வளையமாதேவி துணைமின் நிலைய பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கிறது.
இதனால், தொடர் மின்சாரம் கிடைக்காததால், குறுவை சாகுபடிக்காக நிலங்களில் தண்ணீர் பாய்ச்சி உழவு ஓட்ட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்தது, 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் ஷிப்டு முறையில் விடும்போது, தண்ணீர் பாசனம் செய்து சில மணிநேரங்களில் கோடை தாக்கத்தினால் தண்ணீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுகிறது.
இயந்திர நடவு பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் குறித்த காலத்தில் நடவு பணிகளை செய்யமுடியவில்லை. மின்சாரமும் விவசாயிகளுக்கு கைகொடுக்காததால் நடவு பணிகளை மேற்கொள்ளமுடியாமல் காலதாமதமாகி வருகிறது.