ADDED : ஆக 29, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சபை தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் டேனியல் கிருபராஜ், 37; நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக ணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்றார். வாழப்பட்டு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே டேனியல் கிருபராஜ் உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.