ADDED : மார் 01, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் மாசி அமாவாசை விளக்கு பூஜை நடந்தது.
விநாயகபுரம் கருப்பசாமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகம் தலைமை தாங்கி விளக்குப்பூஜை துவக்கி வைத்தனர். கருப்பசாமி கோவில் சாமியார்கள், பக்தர்கள் முன்னிலை வகித்தனர்.
பூஜையில் பெண்கள் பங்கேற்று தாங்கள் கொண்டு வந்த குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி 1008 கருப்பசாமி சரணங்கள் கோஷமிட்டு பூஜைகள் செய்தனர்.
இதில் கருப்பசாமி கோவில் பூசாரிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.