/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நில அளவை அலுவலர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2024 12:38 AM

கடலுார்: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவியரசன் வரவேற்றார். இணை செயலாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் நீலராஜ் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் ஆட்சித்துறை மாநில செயலாளர் வெங்கடாஜலபதி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், புல உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் பாண்டியன் வாழ்த்திப் பேசினர்.
'தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை தரம் உயர்த்துவதற்கான கோப்பின் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொருளாளர் சந்திரஹாசன் நன்றி கூறினார்.