ADDED : ஆக 24, 2024 06:23 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுரேஷ், மூத்த வழக்கறிஞர் பழனிமுத்து, சிவக்குமார், காசி விஸ்வநாதன், மோகன் முன்னிலை வகித்தனர்.
இதில், வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, மாய மணிகண்டன், ஜெயபிரகாஷ், குமரகுரு, ராஜ்மோகன், மோகன்ராஜ், ராகவன், மகாலிங்கம், பெண் வழக்கறிஞர்கள் மகாலட்சுமி, இலக்கியா, அபிராமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த 20ம் தேதி திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொல்கட்டா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.