ADDED : ஜூலை 15, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஆழ்வார், தயாநிதி ஆகியோர் பேசினர். இதில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிலம்புச்செல்வன், துணை தலைவர் ரமேஷ், பொருளாளர் விஜயகுமார், துணை செயலாளர்கள் அந்தோணி பவுல்ராஜ், பாண்டியராஜன், உமாசங்கர், அதியமான், வழக்கறிஞர்கள் தேவராஜ், செல்வகுமார், நிர்மல்குமார், விஜய்வர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
