ADDED : ஜூலை 16, 2026 07:43 PM
விருத்தாசலம்: தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மூத்த வழக்கறிஞர் பூமாலை குமாரசாமி தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் சங்கரய்யா, குமரகுரு முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் காசிவிசுவநாதன், பெரியார், செந்தில், வீரப்பன், ராஜ்மோகன், அப்துல்லா, ஆனந்த ஜோதி, ஜென்னி இனியவள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் கிளை துவங்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர் சேம நல நிதியை 25 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து நீதிமன்ற வளாகங்களில் குழந்தை காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
