/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மி ன்னல் தாக்கி மின் மாற்றி வீட்டு உபயோக பொருட்கள் பழுது
/
மி ன்னல் தாக்கி மின் மாற்றி வீட்டு உபயோக பொருட்கள் பழுது
மி ன்னல் தாக்கி மின் மாற்றி வீட்டு உபயோக பொருட்கள் பழுது
மி ன்னல் தாக்கி மின் மாற்றி வீட்டு உபயோக பொருட்கள் பழுது
ADDED : ஆக 12, 2024 05:30 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் நேற்று அதிகாலை திடீரென இடி விழுந்ததில் மின் மாற்றி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்தது.
நடுவீரப்பட்டு பகுதியில் நேற்று அதிகாலை பரவலாக மிதமான மழை பெய்தது. அதிகாலை 5:00 மணிக்கு திடீரென அதிக சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் காமாட்சிபேட்டை மற்றும் சி.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள இரண்டு மின் மாற்றிகள் பழுதடைந்தது.
மேலும் வீடுகளில் இருந்த பேன், டிவி,கேமரா உள்ளிட்ட வீடு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தது.
மின் மாற்றி பழுதடைந்ததால் தற்காலிகமாக வீடுகளுக்கு மட்டும் பக்கத்தில் உள்ள மின் மாற்றியிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆனால் குடிநீர் மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளின் மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
ஆகையால் பழுதடைந்த மின்மாற்றிகளை போர்கால அடிப்படையில் மாற்றி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.