ADDED : ஜூன் 11, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் திருப்பதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடி படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டி.எஸ்.பி., தமிழ் இனியன் தலைமை தாங்கினார். சிங்கப்பெண் அதிரடி படையின் சப் இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர், ‘பெண்களுக்கு பாலியல் தொல்லை, அத்துமீறல் நடந்தால் 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அருகில் உள்ள பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை நடந்தாலும் புகார் தெரிவிக்கலாம்,’ என்றார்.
தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
