/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு
/
மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு
ADDED : மார் 31, 2024 03:53 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் பனஞ்சாலை ஏரியில் மூழ்கி மதுபான பார் ஊழியர் உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 39; வளையமாதேவி அரசு டாஸ்மாக் பாரில் ஊழியர். நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் வேலைக்கு சென்றவர், மாலை 6:00 மணியளவில் எறும்பூர் பனஞ்சாலை ஏரியில் தண்ணீரில் மூழ்கி இறந்த கிடந்தார்.
தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் பழனிச்சாமி உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிந்து, பழனிச்சாமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

