நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, ராஜேந்திரபட்டிணத்தில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன், 45, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.