/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மிலாடி நபியையொட்டி நாளை மதுக்கடை மூடல்
/
மிலாடி நபியையொட்டி நாளை மதுக்கடை மூடல்
ADDED : செப் 16, 2024 05:43 AM
கடலுார் : மிலாடி நபி தினத்தையொட்டி, கடலுார் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவின் பேரில் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி தினத்தையொட்டி நாளை (17ம் தேதி) அனைத்து அரசு டாஸ்மாக் மதுப்பானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள், அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள், விற்பனைக் கூடங்கள் நாளை கட்டாயம் மூடப்பட வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
மிலாடி நபி தினத்தன்று அரசு உத்தரவை மீறி மதுக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.