நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தேவராஜன் முன்னிலை வகித்தார். முனைவர் அய்யாறு, புகழேந்தி ஆகியோர் பங்கேற்று தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ் சார்ந்த கருத்துக்கள் குறித்து பேசினர்.
மாணவ, மாணவிகள் தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தி பேச்சுப்போட்டி, இலக்கியம், கட்டுரை, கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
ஆசிரியர் செல்வராசு நன்றி கூறினார்.