/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுமைதாங்கி - துறையூர் இணைப்பு சாலை பஞ்சர்
/
சுமைதாங்கி - துறையூர் இணைப்பு சாலை பஞ்சர்
ADDED : மே 26, 2024 05:55 AM

பெண்ணாடம்: விளைநிலங்களுக்கு செல்லும் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் பேரூராட்சி, சுமைதாங்கி - துறையூர் இடையே விளை நிலங்களுக்குச் செல்லும் இணைப்பு தார் சாலையை பயன்படுத்தி சுமைதாங்கி, மாளிகைக்கோட்டம், துறையூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிலங்களில் விளையும் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை எடுத்துச் செல்கின்றனர். இந்த தார் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், இவ்வழியே இடுபொருட்கள் மற்றும் அறுவடை செய்த பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பழுதாவதால் விவசாயிகள் அவதியடைகின்றனர். எனவே, விளை நிலங்களுக்குச் செல்லும் இந்த இணைப்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.