/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பனஞ்சாலை ஏரியில் பல லட்சம் மதிப்பிலான நாட்டு கருவேல மரங்கள் வெட்டி விற்பனை
/
பனஞ்சாலை ஏரியில் பல லட்சம் மதிப்பிலான நாட்டு கருவேல மரங்கள் வெட்டி விற்பனை
பனஞ்சாலை ஏரியில் பல லட்சம் மதிப்பிலான நாட்டு கருவேல மரங்கள் வெட்டி விற்பனை
பனஞ்சாலை ஏரியில் பல லட்சம் மதிப்பிலான நாட்டு கருவேல மரங்கள் வெட்டி விற்பனை
ADDED : ஜூன் 16, 2024 10:36 PM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் பனஞ்சாலை ஏரி, சின்னநற்குணம் எல்லையில் வனத்துறைக்கு சொந்தமான நாட்டு கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர், சின்னநற்குணம் கிராமங்களுக்கு சொந்தமான பனஞ்சாலை ஏரி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது.
விருத்தாசலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் வளையமாதேவி, சின்னநற்குணம், தர்மநல்லுார் வயல்களி வடியும் மழை நீர் வந்தடைகிறது.
ஏரியிலிருந்து எறும்பூர், சின்னநற்குணம், ஆணைவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வாய்க்கால்களும், வடிகால் வாய்கால்களும் உள்ளது. ஏரியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு கருவேல மரங்கள் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளனர்.
வெட்டியுள்ள மரங்களை வனத்துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளது. கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஏரியில் மரங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தவில்லை.
மேலும், வனத்துறை அதிகாரிகள் ஒருசிலருடன் கூட்டு சேர்ந்து அரசுக்கு தெரியாமல் வெட்டி விற்பனை செய்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை, வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து மரங்கள் அனுமதியுடன் ஏலம் விடப்பட்டு வெட்டப்பட்டுள்ளதா என உரிய விசாரணை நடத்தி முறைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.