ADDED : மே 23, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
கடலுார்: உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவிஇயக்குனர் செல்வசேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கடலுார் முதுநகர் காய்கறி மார்க்கெட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஏற்றிவந்தது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடலுார் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
