ADDED : ஜூன் 20, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே செம்மண் கடத்திய லாரியை ஆர்.டி.ஒ.அபிநயா பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அணை பகுதியில் கடலுார் ஆர்.டி.ஒ.அபிநயா நேற்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக செம்மண் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.
பண்ருட்டி போலீசில் வி.ஏ.ஒ.,அரவிந்தன் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்டம் ,சேந்தனுாரை சேரந்த லாரி டிரைவர செல்வகுமார்,43; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.