/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபைர் கிரைம் மோசடி மூலம் பணம் இழப்பது அதிகரிப்பு மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
/
சைபைர் கிரைம் மோசடி மூலம் பணம் இழப்பது அதிகரிப்பு மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
சைபைர் கிரைம் மோசடி மூலம் பணம் இழப்பது அதிகரிப்பு மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
சைபைர் கிரைம் மோசடி மூலம் பணம் இழப்பது அதிகரிப்பு மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2024 04:53 AM

கடலுார்: பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ மாணவியர்களை அனுப்பும் பெற்றோர்களிடம் கல்விக்கடன் தருவதாக ஆசைகாட்டி சைபர் கிரைம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லுாரிகளுக்கு மாணவ மாணவிகளை அனுப்பும் பெற்றோரை மொபைல் போன் வழியாக தொடர்பு கொண்டு, கல்வி கடன் பெறுவதற்கு வங்கிகளில் இருந்து பேசுவதாகவும், கல்வி கடன் பெற பரிசீலனை கட்டணம் செலுத்தினால் விரைவாக கல்வி கடன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
இதை நம்பி அவர்கள் கேட்கும் தொகை செலுத்தி ஏமாறுகின்றனர்.
இதேபோல தற்போது டிஜிட்டல் போலீஸ் என்று போலியாக குறிப்பிட்ட நபர்களுக்கு போன் செய்து உங்கள் வங்கி கணக்குகள் மூலம் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் சென்றுள்ளது.
பல்வேறு வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஒரே வங்கி கணக்கில் அனுப்பி எங்களுக்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டி பணத்தை பறித்து வருகின்றனர்.
இதே போல மோசடி நபர்கள் தொழிலில் முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றுவது, திருமண இணையதளங்கள் மூலம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று ஏமாற்றுவது, உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர்.
இது குறித்து எஸ்.பி., ராஜாராம், கூடுதல் எஸ்.பி., பிரபாகரன், ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கல்வி உதவி தொகை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் திட்டமே ஒன்று கிடையாது. கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக கடலுாரில் மட்டும் இதுவரை 13 புகார்கள் வந்துள்ளன.
இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதுகுறித்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த சுற்றறிக்கையை இறை வணக்க கூட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு படித்து காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மோசடிகளை தடுக்க தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.
இது போன்று மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும். மேலும் பணம் ஏமாற்றப்பட்டு 6 மணி நேரத்துக்குள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் இழந்த பணத்தை மீட்டு தர எளிதாக இருக்கும். பொதுவாக திருட்டு சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றில் பறிபோகும் நகை மற்றும் பணத்தை 70 முதல் 80 சதவீதம் வரை மீட்டு விடலாம்.
ஆனால் இதுபோன்று டிஜிட்டல் முறையில் ஏமாற்றப்படும் பணத்தை மீட்பது ஒரு சதவீத அளவிலேயே உள்ளது.
பொதுவாக இந்த விஷயத்தில் படித்தவர்களே அதிகம் ஏமாற்றப் படுகிறார்கள்.
எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலியான மோசடி நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.