ADDED : மே 30, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே காணாமல் போன மொபைல் போனை, போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். இவர், கடந்த 2ம் தேதி தனது வயலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது மொபைல் போன திருடுபோனது. இதுகுறித்த புகாரில், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார், மொபைல் போன் சிக்னலை வைத்து தேடினர்.
அப்போது, திருடுபோன மொபைல் திருப்பூரில் உள்ள ஒரு நபர் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. உடனே ஸ்ரீமுஷ்ணம் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தி வந்த நபரை தொடர்புகொண்டு, மீட்டு, அதன் உரிமையாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.