ADDED : மார் 08, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப்இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது, சேலம் மெயின்ரோடு, சபிதா பேலஸ் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர்.
முதியவர் அதேபகுதியை சேர்ந்த சிவாஜி, 61; என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிவாஜியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், மொபைல் போன், ரூ. 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.