/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
/
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : செப் 15, 2024 06:54 AM
சிதம்பரம்: சிதம்பரம் போலீசில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்ததை தொடர்ந்து, இரு வீட்டாரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி மகன் கவுதமன், 24; இவரும் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமரவேல் மகள் கவித்தென்றல், 23; என்பவரும் காதலித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு, நேற்று காலை சிதம்பரம் நகர போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், தகவலறிந்த இரு வீட்டாரின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.